Browse By

அதிமுக வேட்பாளர் பட்டியல்: தொகுதி மாறும் சபாநாயகர், அமைச்சர்கள்

சென்னை: இன்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தற்போதைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதியிலிருந்து பி.தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரவைத் தலைவராக இருந்த டி.ஜெயக்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து, துணை சபாநாயாகராக இருந்த தனபால் சபாநாயகரானார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் தனபால், திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதி மக்களவை முன்னாள் உறுப்பினர் டாக்டர் வி.சரோஜாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

change

இதேபோல திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த வரிசையில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சராக இருந்த கடந்த தேர்தலில் கரூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு மாறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *