Browse By

Vaiko Apologies to DMK chief Mr.M.Karunanidhi.

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்ததற்காக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மன்னிப்பு கோரியுள்ளார். அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது மன்னிப்பை கருணாநிதி தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Tamil_News_large_149566820160406210007

சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியை பிரிப்பது கருணாநிதியின் குணம். உலக மகா மோசடி செய்வதில் கருணாநிதியை மிஞ்ச முடியாது. கூட்டணி சேராததால் தேமுதிக.,வை உடைக்க திமுக முயற்சிக்கிறது. 2006ம் ஆண்டு மதிமுக.,வை உடைத்து தாயகத்தை கைப்பற்ற கருணாநிதி முயற்சித்தார். மதிமுக.,வுக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை உருவாக்கவும் முயற்சித்தார்.

சந்திரகுமாருக்கு சில நாட்களுக்கு முன் தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 2ஜி ஊழல் மூலம் திமுக பல ஆயிரம் கோடிகளை சேர்த்துள்ளது. விஜயகாந்திற்கு சந்திரகுமார் பச்சை துரோகம் செய்து விட்டார். தேமுதிக நெல்லை மாவட்ட செயலாளர் முகம்மது அலியை திமுக.,விற்கு அழைத்து வருவோருக்கு ரூ.50 லட்சம் தருவதாக திமுக கூறி இருந்தது. முகம்மது அலிக்கு திமுக.,விற்கு வர ரூ.3 கோடி பேர பேசப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் கருணாநிதியின் குலத்தொழில் குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தேமுதி.,வில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார், தங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வைகோவுக்கு தகுதியில்லை என கடுமையாக தாக்கி பேசினார். சந்திரகுமாரின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பதிலடி கொடுப்பதற்காகவே வைகோ இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது பேச்சுக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தே.மு.தி.க.,வில் ஏற்பட்ட நிலை குறித்து, நிருபர்களிடம் பேட்டி அளித்தேன். அப்போது, பணம் வாங்கிக் கொண்டு, கட்சி மாறுவது இழிவானது என கூறியபோது, இது உலகத்தின் ஆதித் தொழிலைப் போன்றது என கூறினேன். ஆனால், கருணாநிதி குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ மறைமுகமாக இப்படி சொல்ல வேண்டும் என, இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, என் தாய் மீது ஆணையாகக் கூறுகிறேன்.நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்கு தெரியும் என்று கூறியது, தவறாக பொருள் கொள்ளும்படி ஆகிவிட்டது. அது மிகப் பெரிய தவறு தான். கருணாநிதியை ஜாதி குறிப்பிட்டு, நான் சொன்னதாக பழிப்பதற்கும் ஆளாகி விட்டதை எண்ணி, வேதனைப்படுகிறேன். இப்படி நான் கூறியதை, என் வாழ்நாளில் செய்த குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். தாய் உள்ளத்தோடு, என் விளக்கத்தை கருணாநிதி ஏற்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *